RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

आरबीआई की घोषणाएं
आरबीआई की घोषणाएं

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78525574
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்ட்ரா– கால நீட்டிப்பு

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் உத்தரவுகள் – சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்ட்ரா– கால நீட்டிப்பு

மார்ச் 04, 2021

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன்
இணைந்தப் பிரிவு 56 இன் கீழ்
உத்தரவுகள் – சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்ட்ரா–
கால நீட்டிப்பு

சிவாஜிராவ் போசலே சகாகரி பாங்க் லிமிடெட், புனே, மகாராஷ்டிரா, மே 03, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-I./D-14/12.22.254/2018-19 உத்தரவுகளின் படி, மே 04, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாகமார்ச் 04, 2021 வரை நீட்டிக்கப்பட்டது.

2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 04, 2021 தேதியிட்ட DOR.MON/D-61/12.22.254/2020-21 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு ஜூன் 04, 2021 வரை தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.

3. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் மார்ச் 04, 2021 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.

(யோகேஷ் தயால்)     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/1199

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?