அங்கத்தினர்கள் தவிர மற்றவர்களுக்கு குறித்தகால வைப்புகளின் பேரில் கடன்
RBI/2016-17/57 செப்டம்பர் 01, 2016 தலைமை நிர்வாக அதிகாரிகள் அம்மையீர் / ஐயா அங்கத்தினர்கள் தவிர மற்றவர்களுக்கு குறித்தகால வைப்புகளின் பேரில் கடன் எங்களின் ஆகஸ்டு 8, 2001 தேதியிட்ட UBD No.BL(SEB)5A/07.01.00/2001-02 சுற்றறிக்கையின்படி ‘ஊதியதாரர்கள் கூட்டுறவு வங்கிகள்’, புதியதாக கிளைகள் திறக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது, பின்வரும் கட்டளையை அவை பூர்த்தி செய்திட வேண்டும். வெளியாட்கள் (பணியாளர் அல்லாதவர்கள்) எவரையும் அங்கத்தினராக அல்லது பெயரளவில் அங்கத்தினர்களாகச் சேர்த்து அவர்களுக்குக் கடன் கொடுப்பதை அனுமதிக்கும் வகையில் அந்த ஊதியதாரர்கள் கூட்டுறவு வங்கியின் உபவிதிகள் அமைந்திருக்கக் கூடாது. 2. டிசம்பர் 14, 2015 அன்று நடைபெற்ற 32-வது ஆலோசனை நிலைக்குழுவின் கூட்டத்தில் நடந்த விவாதங்களுக்குப்பின், “ஊதியதாரர்கள் கூட்டுறவு வங்கிகள்” பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளியாருக்குக் கடன் வழங்கலாம் என்று அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டது. நிபந்தனைகள்:
3. ஆகஸ்டு 08, 2011 தேதியிட்ட UBD.No.BL(SEB)5A/07.01.00/2001-02 சுற்றறிக்கையில் உள்ள இதர நிபந்தனைகள் மாற்றமின்றி இருக்கும். இங்ஙனம் (A.G. ரே) இங்ஙனம் (சுமா வர்மா) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: