RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2
High Contrast Version
High Contrast Version
Text Size
Text Size
PwC_SIT

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78449708

காசோலை வடிவங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி ரேமாதிரியானவையாக ஆக்குதல்

காசோலை வடிவங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி ரேமாதிரியானவையாக ஆக்குதல்

RBI/2009-2010/503
DPSS.CO.CHD.No.2806/04.07.05/2009-2010

ஜுன் 22, 2010

தலைவர்/நிர்வாக இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (பிராந்திய கிராம வங்கிகள் உட்பட)
நகர கூட்டுறவு வங்கிகள்/மாநில கூட்டுறவு வங்கிகள்/மாவட்ட கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்,

காசோலை வடிவங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி ஒரேமாதிரியானவையாக ஆக்குதல்

மேற்குறிப்பிட்ட பொருள் குறித்த சுற்றறிக்கை எண் DPSS.CO.CHD.No.1832/ 04.07.05/2009-2010, பிப்ரவரி 22, 2010 தேதியிட்டதை கவனிக்கும்படியும் அதிலும் குறிப்பாக, காசோலைகளில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்களைத் தவிர்த்தல் குறித்த பிற்சேர்க்கையிலுள்ள பத்தி எண் 1.8ஐப் பார்வையிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவற்றின் சட்டரீதியான ஏற்பு தன்மை அமல்படுத்தும் தேதி ஆகியவை குறித்து வங்கி மற்றும் பொதுமக்களிடமிருந்து விளக்கங்கள் கோரி குறிப்புகள் வந்துள்ளன.  காசோலைகளில் மாற்றங்கள் மற்றும்  திருத்தங்களைத் தவிர்த்தல் பற்றிய விதிகள் குறித்து பின்வருமாறு:

  1. காசோலை வடிவங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி தரத்தில் அவற்றை ஒரேமாதிரியானவையாக ஆக்கிட வேண்டுவதன் அவசியத்தைப்  பரிசீலிக்கும்பொருட்டு அமைக்கப்பட்ட செயற்குழுவின் பரிந்துரைகள் மற்றும் வங்கிகளுடனான கருத்துரைகளுக்குப்பின்னர் விதிகள் பரிந்துரைக்கப்பட்டன.

  2. காசோலையின் வெவ்வேறு பகுதிகளில் செய்யப்படும் மாற்றங்களில் நிகழும் மோசடிகளைக் கட்டுப்படுத்தி, வாடிக்கையாளருக்கும் வங்கிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும்பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.

  3. கணினிவழி ஊடுகதிர்படம் மூலம் தீர்வு(CTS) செய்யப்படும் காசோலைகளுக்கு மட்டுமே இவை பொருந்தும்.  காசோலை சேகரம் செய்யும் வங்கி, இத்தகு மாற்றங்கள், திருத்தங்கள் உடைய காசோலைகளை முதலிலேயே தீர்வுக்கு கொண்டு செல்லும் நிலையிலேயே மறுத்திட வேண்டும்.

  4. இதரவகையான காந்தமை எழுத்து கண்டறியும் தீர்வு (MICR), அவையல்லாத தீர்வு  (Non-MICR), முகப்பியே பணம் பெறும் தீர்வு மற்றும் தீர்வு மையங்களுக்கு வெளியே நேரடியாக நடைபெறும் தீர்வு ஆகிய வகையில் தீர்வு செய்யப்படும் காசோலைகளுக்கு இவை பொருந்தாது.

  5. செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைச் சட்டம் 2007ல் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விதிகள் வெளியிடப்படுகின்றன.

இதற்கான விதிகள் டிசம்பர் 2010லிருந்து நடைமுறைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவை குறித்த அறிவூட்டி, விழிப்புணர்வு அளிக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.  இதனால் இடையூறுகளின்றி சுலபமாக இதை நடைமுறைப்படுத்த முடியும்.  சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர விவரங்கள் குறித்து இந்தியவங்கிகள் சங்கம் மற்றும் இந்திய தேசிய செலுத்துதல் குழுமம் ஆகியவை தனியே தகவல்கள் அனுப்பிவிடும்.

தங்களது உண்மையுள்ள

(அருண் பஸ்ரிகா)
பொது மேலாளர்.

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?